தளபதி69 இந்த படத்தின் கதையா!! மேடையில் உளறிய விடிவி கணேஷ்.. அதிர்ச்சியான இயக்குநர்..
விடிவி கணேஷ்
இயக்குநர் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் டகுபதி, மீனாட்சி செளத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சங்கராந்தி வஸ்துன்னாம் என்ற படம் உருவாகி வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் நடிகர் விடிவி கணேஷ் கலந்து கொண்டு மேடையில் பேசியுள்ளார். அதில் தளபதி விஜய் பகவந்த் கேசரி படத்தை தடவை பார்த்துவிட்டு அனில் ரவிப்புடியிடம் அதை ரீமேக் பண்ணலாம் என்று விஜய் கேட்டதாக பேசியுள்ளார்.
தளபதி69 கதை
உடனடியாக மேடையில் இருந்து அனில் ரவிப்புடி, விடிவி கணேஷை தடுத்து நிறுத்தி தளபதி 69 படத்தை இயக்க விஜய் சந்தித்து பேசியது உண்மை தான். அவர் ரொம்பவே சூப்பரான கேரக்டர்.
தளபதி 69 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் அந்த படத்தின் கதையை சொல்வது சரியில்லை என்பதால் தான் விடிவி கணேஷ் சாரை தடுத்தேன் என மேடையிலேயே விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குநர் அனில். ஏற்கனவே 2023ல் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா நடித்த பகவந்த் கேசரி என்ற படத்தை அனில் ரவிப்புடி இயக்கி இருந்தார்.
அந்த படத்தின் ரீமேக் தான் தளபதி 69 என தகவல்கள் கசிந்தநிலையில், தற்போது அனில் ரவிப்புடியின் நடவடிக்கையால் இந்த கதையை தான் விஜய்யை வைத்து எச் வினோத் இயக்குகிறார் என்று உறுதியாகிவிட்டது. இதற்கு காரணமாக இருந்த விடிவி கணேஷை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.