3 முட்டாள்தனமான திருமணம்..17 வருஷம் போச்சு!! நடிகை மீரா வாசுதேவன் வேதனை...
மீரா வாசுதேவன்
உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன், மலையாளத்தில் மோகன்லால் நடித்த தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

திருமணம்
2005ல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை காதலித்து திருமணம் செய்த 5 ஆண்டுகளில் 2010ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். பின் மலையாள நடிகர் ஜான் கொக்கனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு சில காலத்திலேயே விவாகரத்து செய்தார்.
அர்ஹரா என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த 2024 மே மாதத்தில் ஒளிப்பதிவாளர் விபின் புத்யங்கத்தை 3வது திருமணம் செய்து கொண்டார். இத்திருமணமும் நீடிக்காமல் கடந்த 2025ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

17 வருஷம் போச்சு
விவாகரத்து குறித்து பல பேட்டிகளில் மனம் திறந்து பேசி வரும் மீரா, தான் தவறுகள் செய்துள்ளேன், என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, இப்போது நான் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மலையாள ஊடகத்திற்கு மீரா வாசுதேவன் அளித்த பேட்டியொன்றில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைகள் பற்றி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அதில், நான் என் மகனிடம் அடிக்கடி சொல்வேன், 3 முட்டாள்தனமான திருமணங்களுக்காக என் வாழ்க்கையின் 17 வருடத்தை வீணடித்துவிட்டேன். அந்நேரத்தில் புத்திசாலித்தனமாக வேலை செய்திருந்தால் நான் இன்னும் பல சாதனைகள் செய்திருக்கலாம்.
சினிமா, உடற்பயிற்சி, எனக்காக ஒரு சிறந்த சமூக வட்டத்தை உருவாக்குவது போன்ற நான் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.