பாலமேடு ஜல்லிக்கட்டு காண சென்ற ஜீவாவுக்கு நடந்தது என்ன? பெண் பகிர்ந்த தகவல்..
நடிகர் ஜீவா
தமிழ் சினிமாவில் டாப் நடிக்ராக திகழ்ந்து வரும் நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவர் தம்பி தலைமையில் என்ற படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் ஜீவா பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் திடீரென அங்கிருந்த ஒரு வீட்டில் நுழைந்து தன்னுடைய காஸ்டியூமை மாற்றிக்கொண்டிருந்தார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு
தொடர்ந்து வீட்டைச்சுற்றி ரசிகர்கள் சூழ்ந்ததால் வீட்டில் விருந்தாளியாக வந்திருந்தவர்கள் தங்களை வீட்டில் அனுமதிக்குமாறு பவுன்சரிடம் கேட்டனர்.
பின் வீட்டின் உரிமையாளர் மற்றும் விருந்தாளியாக வந்திருவர்கள் உள்ளே சென்று நடிகர் ஜீவாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வேஷ்டியுடன் வெளியில் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டார் ஜீவா.

இதன்பின் தனது தாத்தா வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த பெண் கூறுகையில், பொங்கல் பண்டிகை என்பதால் தாத்தாவுக்கு உணவு கொடுக்க வந்திருந்தோம்.
திடீரென வீட்டைச்சுற்றி கூட்டம் திரண்டதால் வந்து பார்த்தோம், நடிகர் ஜீவா காஸ்டியூம் மாற்றுவதாகவும் 5 நிமிடம் வெளியில் காத்திருக்கவும் சொன்னார்கள். பின் உள்ளே சென்று அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டோம், மிக்க நன்றி என்று ஜீவா கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.