சித்ரா தந்தை தற்கொலை.. என் குடும்பமே நாசமா போச்சு!! கதறி அழுத அம்மா...
சித்ரா, தந்தை தற்கொலை
சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமான நடிகை சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து வந்தார். ஹோட்டல் ஒன்றில் கடந்த 2020 டிசம்பர் 9 ஆம் தேதி அறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் சித்ரா தற்கொலை செய்த 4 ஆண்டுகளுக்கு பின் அவரது தந்தை காமராஜ் திருவான்மியூரில் இருக்கும் இல்லத்தில், மகள் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சித்ராவின் அம்மா கதறி அழுதபடி பேசியிருக்கிறார்.
கதறி அழுத அம்மா
அதில், காலை 4 மணிக்கு நான் பார்க்கும்போது கூட அவர் உட்கார்ந்து தான் இருந்தார். பின் 6 மணிக்கு வந்துபார்த்தேன், ரூமில் இல்லாததால் சித்ரா ரூமுக்கு சென்று பார்த்தேன், சித்ரா இருந்த ரூமிலேயே அவரும் அவரோட வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
என் வீடு சுடுகாடா ஆகிப்போச்சு, என் பொண்ணையும் சாகடித்துவிட்டான், இப்போ என் கணவரையும் சாகடித்துவிட்டான், அவன் நல்லா இருப்பானா? இன்னும் யார் யாரை சாக அடிக்க போகிறான்னு தெரியவில்லை.
சந்தோஷமா இருந்த குடும்பத்திற்குள் எந்த நேரத்தில் வந்தான்னு தெரியல என் குடும்பமே நாசமா போச்சு, அவன் என்னைக்கு விடுதலையாகி வெளியில் வந்தானோ அப்போதில் இருந்தே என் வீட்டுக்கார் சாப்பிடாம மனசால நொந்து போய்ட்டார். நான் எவ்வளவு தைரியம் சொல்லியும் அவரால் அதை ஏத்துக்கவே முடியல.
கடைசில இப்படி ஒரு முடிவை எடுத்து என்ன இப்படி அனாதையா ஆக்கிவிட்டாரே, என் பொண்ணு சித்ரா இந்த வீட்டுக்கு ஆம்பள மாதிரி இருந்து எல்லாத்தையும் செஞ்சா, அவளும் போய்ட்டா கடைசில இப்ப என் வீட்டுக்காரரும் போயிட்டாரு. இப்போ யாருமே இல்லாம கடைசில நான் அனாதையா இருக்கேன் என்று கதறி அழுதுள்ளார் சித்ராவின் அம்மா.