ஷாருக்கான், ரஜினிகாந்த்-ஆ வேண்டவே வேண்டாம்!! வாய்ப்பு கிடைத்து ஒதுக்கிய பிரபல விஜே..
பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படத்தில் எப்படியாவது நடித்துவிடலாம் என்று ஒரு ஏக்கம் இருக்கும். ஆனால் ஒரு பிரபலம் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்துடன் வாய்ப்பு கிடைத்து வேண்டவே வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம்.
90ஸ் காலக்கட்டத்தில் தன்னுடைய காந்தக்குரலால் அனைவரையும் தன் பக்கம் இழுத்தவர் பெப்ஸி உமா. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகி பல ஆண்டுகளாக நல்ல வரவேற்பு பெற்று வந்த நிகழ்ச்சி உங்கள் சாய்ஸ். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன்னுடைய ரசிகர்களுடன் சிறந்த முறையில் பேசி பாப்புலரானார் பெப்ஸி உமா.
பல ஆண்டுகள் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பெப்ஸி உமா, சமீபத்தில் நடந்த விருதுவிழாவின் போது தன்னுடைய பழைய தொலைக்காட்சி விஜே நண்பர்களை சந்தித்தது வைரலானது. இந்நிலையில் பெப்ஸி உமா ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் படத்தின் வாய்ப்பினை நிராகரித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
சினிமா வாய்ப்புகள் வந்த போது தனக்கு டிவி வாழ்க்கையே போது என்று கூறி சினிமாவை ஒதுக்கி வந்துள்ளார். அப்படியொரு முறை ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடியோவில் பெப்ஸி உமா சென்றிந்த போது அவரை பிரபல இந்தி தயாரிப்பாளர் சுபாஷ் காய் சந்தித்துள்ளார்.
ஷாருக்கானை வைத்து ஒரு படம் உருவாக இருப்பதால் அதில் நடிக்க வைக்க பெப்ஸி உமாவிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்துள்ளார் பெப்ஸி உமா. அதன்பின் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நடிப்பில் ஆசையில்லை என்று கூறி அதையும் நிராகரித்திருக்கிறார் பெப்ஸி உமா.