கருப்பு சட்டை டூ வெள்ளை சட்டை? சிபிஐ விசாரணையால் மிரண்டுபோனரா தவெக தலைவர்..
விஜய் - சிபிஐ
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் நடந்தது. அப்போது கூட்ட நெரிசலில் 41பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் சி டி ஆர் நிர்மல்குமார் ஆகியோர் டெல்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

பின் தவெக தலைவரான விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆஜராக கடந்த 6 ஆம் தேதி சம்மன் அனுப்பியதும் கடந்த 12 ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு தனிவிமானத்தில் விஜய் சென்றார். விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் கரூர் கூட்டத்திற்கு காலதாமதமாக வர யார் ஆலோசனை கொடுத்தது என்று கேட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 7 மணி நேரம் விசாரணைக்கு பின் மறுநாள் விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய்க்கு அறிவுறுத்தினர் அப்போது விஜய் பொங்கல் பண்டிகை வருவதால் 19 ஆம் தேதி நேரில் ஆஜராவதாக கடிதம் மூலம் உறுதியளித்தார். அதன்படி சிபிஐ அதிகாரிகள் விஜய்யை 19 ஆம் தேதி நேரில் ஆஜராக அனுமதியளித்தனர்.
இதற்கிடையில் விஜய்க்கும் கட்சி கூட்டம் மற்றும் மாநாட்டிற்கு எந்த வகையில் பணம் வருகிறது என்று சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி குறித்து தனியாகவும் விசாரணை நடந்தது.

கருப்பு சட்டை
இந்நிலையில் வழக்கமாக கட்சி சார்ந்த நிகழ்வுகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு வெள்ளை சட்டை, காக்கிநிற பேண்ட் அணிந்துதான் விஜய் செல்வார். ஆனால் கடந்த 12 ஆம் தேதி நடந்த சிபிஐ விசாரணைக்கு கருப்புநிற சட்டை, பேண்ட் அணிந்து சென்றிருக்கிறார்.
சென்றமுறை கருப்புநிற சட்டை, பேண்ட் அணிந்து சிபிஐ விசாரணைக்கு சென்றதால் விஜய் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அடிபணியமாட்டார் என்று குறியீடாகச் சொல்வதாக தவெகவினர் கூறி வந்தனர்.

ஆனால் 19 ஆம் தேதி இன்று வெள்ளை நிற சட்டை அணிந்து சிபிஐ விசாரணைக்கு சென்றதால், பாஜகவினருடம் சமாதானமாக போக முடிவெடுத்துவிட்டாரா விஜய்? என்ற விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகிறது. ஆனால், சென்னையில் இருந்து நேற்று சென்றபோதுதான் வெள்ளைநிற ஆடையணிந்தார், இன்று 19 ஆம்தேதி, விஜய் கருப்பு நிற ஆடையில் தான் சென்றுள்ளார் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.
