துரந்தர் பட ஹீரோயின் சாரா அர்ஜுனின் பிளாக் & ஒயிட் போட்டோஷூட்..
சாரா அர்ஜுன்
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்ற படம் தான் தெய்வத்திருமகள். இப்படத்தில் குட்டி நட்சத்திரமாக சாரா அர்ஜுன் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படத்திற்கு பின் சைவம், சித்திரையில் நிலாச்சோறு, விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிப்படங்களிலும் நடித்து வந்தார் சாரா.
6 வயதில் குட்டி நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது நந்தினி ரோலில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இதனையடுத்து பாலிவுட்டில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக துரந்தர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் இப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரூ. 1300 கோடிக்கும் மேல் வசூலை எட்டியிருக்கிறது.
இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா அர்ஜுன், தாவணி பாவடை அணிந்து எடுத்த பிளாக் & ஒயிட் கலந்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Uphoria
சமீபத்தில் அவர் நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள Uphoria படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சிக்கு சென்ற தாவணி பாவாடை லுக்கில் எடுத்ததை தான் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.