இப்படியான வெறுப்பு நிறைந்த மனிதரை பார்த்ததில்லை!! ஏ ஆர் ரஹ்மான் குறித்து பிரபல நடிகை ஓபன்..

A R Rahman Gossip Today Kangana Ranaut Chinmayi
By Edward Jan 19, 2026 11:30 AM GMT
Report

ஏ ஆர் ரஹ்மான்

இந்திய சினிமாவின் இசைப்புயலாக திகழ்ந்து வரும் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறிய கருத்துக்கள் தான் ஹாட் டாப்பிக்காக தற்போது இருந்து வருகிறது. விக்கி கெளஷல் நடிப்பில் வெளியான chawa படம் பிரிவினையை உண்டாக்கும் படம் என்று கூறியிருந்தார்.

இப்படியான வெறுப்பு நிறைந்த மனிதரை பார்த்ததில்லை!! ஏ ஆர் ரஹ்மான் குறித்து பிரபல நடிகை ஓபன்.. | Kangana Ranaut Accuses Ar Rahman Over His Comment

மேலும் பாலிவுட் திரையுலகில் சமூக ரீதியான காரணங்களால் தனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டதோ என்று சந்தேகிப்பதாக குற்றம் சாட்டியிருந்தேன். ஏ ஆர் ரஹ்மானின் இந்த கருத்துக்கள் தஆற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

நடிகை கங்கனா

இந்நிலையில், நடிகை கங்கனா, தன்னுடைய எமர்ஜென்சி படத்திற்கு இசையமைக்க ரஹ்மான் மறுத்துவிட்டதாகவும், தாம் ஒரு கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் முன் முடிவோடு பல பாரபட்சங்களை எதிர்க்கொள்வதாகவும் ஏ ஆர் ரஹ்மான் போன்று பாரபட்சம் பார்க்கும், வெறுப்பு நிறைந்த ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதாவது, தான் இயக்கி நடித்த எமர்ஜென்சி படத்தின் கதையை ஏ ஆர் ரஹ்மானிடம் கூற ஆசைப்பட்டதாகவும் ஆனால் தன்னை சந்திக்கக்கூட அவர் மறுத்துவிட்டதாகவும் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இப்படியான வெறுப்பு நிறைந்த மனிதரை பார்த்ததில்லை!! ஏ ஆர் ரஹ்மான் குறித்து பிரபல நடிகை ஓபன்.. | Kangana Ranaut Accuses Ar Rahman Over His Comment

ராகுல் காந்தியே தன்னுடைய படத்தை பாராட்டியபோதும், ரஹ்மானின் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்ததாகவும் கங்கனா விமர்சித்துள்ளார். இதேபோல், பேட்டியின்போது வந்தே மாதரம் மற்றும் மா துஜே சலாம் பாட ஏ ஆர் மறுத்தது விமர்சனத்திற்குள்ளானது.

இதற்கு பாடகி சின்மயி உள்ளிட்டோர், பேட்டியின்போது குரல் சிறந்த நிலையுல் இல்லாததால் பாட மறுத்திருக்கலாம் என்று ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.