நயன் தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைக்கு உண்மையான தாய் இவரா? வெளியான தகவல்
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்று கூறும் அளவிற்கு உச்சத்தி தொட்டு இருப்பவர் நடிகை நயன் தாரா கடந்த 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன் தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரெசாட்டில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
ஹனிமூன் - ஷூட்டிங் - இரட்டை குழந்தை
திருமணத்திற்கு பின் ஒருவார தாய்லாந்து ஹனிமூன், ஜவான் ஷூட்டிங் என்று இருந்துவிட்டு பின் பிரான்ஸ் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று இரண்டாம் ஹனிமூனை கொண்டாடி வந்தார்.

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு தன் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டாடி அங்கு எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டும் வந்தனர் புது தம்பதியினர். இப்படி சென்று கொண்டிருக்கும் போது தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்றும் அது வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்டோம் என்றும் கூறி புகைப்படத்தோடு இணையத்தில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன். இந்த சம்பவம் பெரியளவில் பேசு பொருளாக மாறி விமர்சனத்திற்குள்ளானது.
வாடகை தாய் யார்
இந்நிலையில் நயன் தாரா - விக்னேஷ் சிவன் யார் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என்று செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. விதிமுறைகளின் படி அவர்களின் உறவினர்களாக இருக்க வேண்டும் என்பதற்கேற்ப அவர்கள் கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் உறவினர் என்பது வெளியாகியுள்ளது.
ஆனால் அந்த உறவினர் எந்தமுறையில் உறவு என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருவரும் இடையில் வெளிநாட்டு பயணத்தின் போது இந்த முடிவுகளை எடுத்துவிட்டு தன் குடும்பத்தினரின் ஆலோசனைப்படி நயன் - விக்கி முடிவெடுத்திருக்கலாம் என்றும் இந்த விசயத்தை திருமணத்திற்கு முன்பே திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கலாம் என்றும் கூறி வருகிரார்கள்.
