பீட்டர் பால் மரணத்திற்கு முக்கிய காரணமே இதான்!! உண்மையை உடைத்த நடிகை வனிதா..
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பீட்டர் பால் என்பவரை காதலித்து கொரானா சமயத்தில் ரகசியமாக மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்த படி திருமணம் செய்து கொண்டார்.
இந்த சம்பவம் மிகப்பெரியளவில் பேசப்பட்ட நிலையில், வனிதா இணையத்தில் அதிகமாக பேசப்படும் பிரபலமாக திகழ்ந்தார்.
ஆனால் சில நாட்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பீட்டர் பாலை விட்டு பிரிந்துவிட்டார் வனிதா. சமீபத்தில் பீட்டர் பால் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இதற்கு இணையத்தில் வனிதாவின் கணவர் மரணம் என்று செய்திகள் வெளியிட்டு வருவதை பார்த்து கவலைப்பட்டார் வனிதா.
அதனால் இருவரும் காதலித்து வந்தது உண்மை, ஆனால் இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்யவில்லை என்று வனிதா தெரிவித்தார்.
இந்நிலையில் பீட்டர் பால் உண்மையில் என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார். அதில், 2020ல் பீட்டர் பாலை காதலித்து மூன்றாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் அவரது முதல் மனைவி எலிசபெத், அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பதால் தொடர்ந்து எனக்கு பிரச்சனை செய்ததால் பீட்டர் பாலை ஒதுக்கி வைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பீட்டர் பால் 24 மணிநேரமும் மதுவுக்கு அடிமையாகி குடித்து வந்ததால் உடம்பில் ரத்தத்தைவிட மதுவின் அளவு அதிகமாகிவிட்டது.
இதனால் கல்லீரல் சுத்தமாக செயலிழந்து அதற்காக கோடியில் சிகிச்சை செய்வதை விட இறக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அவரது இறப்பிற்கு முழுக்க முழுக்க குடிப்பழக்கம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் வனிதா.
ஏற்கனவே வனிதா பீட்டர் பாலை சில நாட்களில் பிரிந்த போது கூட குடிக்கும் பழக்கம் இருந்ததாலும் தவறான நடத்தை காரணமாக பிரிவதாக செய்திகள் அப்போதே வெளியானது.
