அர்ச்சனா இதனால் தான் ராஜா ராணி 2ல் இருந்து விலகினாரா! கலாய்க்கும் நெட்டிசன்கள்
Star Vijay
By Parthiban.A
அர்ச்சனா ஏன் ராஜா ராணி 2ல் இருந்து விலகினார்? அதற்கான பதில் தற்போது கிடைத்து இருக்கிறது.
அர்ச்சனா
விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வந்த நிலையில் கடந்த வாரம் திடிரென அந்த ஷோவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவருக்கு பதிலாக தற்போது நடிகை அர்ச்சனா குமார் அந்த ரோலில் நடித்து வருகிறார்.
இதனால் தான் விலகினாரா
"வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நேரம் வந்துவிட்டது, இனி இன்னொரு பெரிய ப்ராஜெக்ட்டில் சந்திக்கிறேன்" என அர்ச்சனா அப்போது குறிப்பிட்டு இருந்தார்.
அவர் பிக் பாஸ் ஷோ பற்றி தான் பேசி இருக்கிறாரோ என கேள்வி எழுந்திருக்கிறது. அவர் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார் என தகவல் தற்போது பரவி வருகிறது.