பீஸ்ட் இதனால் தான் பிளாப் ஆனதா? காரணம் அந்த கம்பெனி தானா

Beast
By Parthiban.A May 01, 2022 03:00 PM GMT
Report

விஜய்யின் பீஸ்ட் கடந்த மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆனது. அதன் உடன் போட்டிக்கு கன்னட படமான கேஜிஎப் 2 வந்தது. பீஸ்ட்டுக்கு நெகடிவ் விமர்சனம் வந்ததால் மக்கள் கேஜிஎப் 2 பக்கம் சென்றுவிட்டார்கள்.

ஆனாலும் தமிழ்நாட்டில் போட்ட பணத்தை சன் டிவி திரும்ப எடுத்துவிட்டது என்றும் சொல்லலாம். ஆனால் கேரளாவில் பீஸ்ட் படத்தை வாங்கிய நிறுவனத்திற்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

கேஜிஎப் 2 படத்தையும் அதே நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது. இரண்டு படங்களும் அவர்கள் கையில் இருக்க, விஜய் ரசிகர்கள் அதிகம் இருக்கும் கேரளாவிலேயே பீஸ்ட் பிளாப் ஆகி இருக்கிறது.

ஒரே நிறுவனம் வாங்கியது தான் பீஸ்ட் தோல்விக்கு காரணமோ?