திரிஷாவுக்கே கிடைச்சது ஏன் எனக்கு கிடைக்கல! அவமானத்தில் விக்னேஷ் சிவனுடன் புலம்பும் நயன் தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தனி விமானமே வைத்திருக்கும் நயன் தாரா தான் காதலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனுடம் நாடு நாடாக விமானத்தில் பறந்தும் வருகிறார்.
பல படங்களில் பிஸியாக இருக்கும் நயன் தாரா விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு ஷாருக்கான், அட்லீ படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் ஒரு விஷயத்திற்காக நயன் தாரா விக்னேஷ் சிவனுடன் கூறி புலம்பியுள்ளாராம்.
சமீபகாலமாக ஐக்கிய அரபிய எமிரேட் நாடுகளான சவுதி, அரேபியா, துபாய் போன்ற நாடுகளில் இந்திய நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதில் மோகன்லால், ஷாருக்கான், மம்முட்டி, பிரத்விராஜ், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா கொடுத்துள்ளது.
ஆனால், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை நயன் தாராவிற்கு இன்று வரை கோல்டன் விசா கொடுக்காமல் இருந்து வருகிறது. சமீபத்திய பண்டிகைகளுக்கு நயன் தாரா விக்னேஷ் சிவன் துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று தான் கொண்டாடி வருகிறார்.
அப்படி இருக்கையில் ஏன் எனக்கு தராமல் அவமானப்படுத்துக்கிறார்கள் என்று விக்னேஷ் சிவனிடம் கூறி புலம்பியுள்ளாராம். அதற்கு காரணமாக கூறப்படுவது என்னவென்றால், மதரீதியாக நயன் தாரா கிறித்தவர்.
ஆனால் காதலர் விக்னேஷ் சிவன் இந்துவாக இருந்து அவருடன் கோவிலுக்கு செல்வதுமாக இருப்பதால் எந்த மதத்தினர் என்று உறுதியாக தெரியாததால் நயனுக்கு கோல்டன் விசா கொடுககாமல் இருந்து வருகிறார்கள்.
சிறுசிறு நட்சத்திரங்களுக்கு கூட அதுப்போன்ற விசாக்கள் கிடைக்கும் போது ஏன் இந்த அடிப்படையை வைத்து கொடுக்காமல் இருந்து வருகிறார்கள் என்று ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.