பிரிகிடாவை கல்யாணம் பண்ணி போட்டோ போட்டது இதற்கு தான்!! இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஓப்பன்..
தமிழ் சினிமாவில் குறும்படங்களை இயக்கியும் நடித்தும் பிரபலமான விக்னேஷ் கார்த்திக் சமீபத்தில், ஹாட் ஸ்பாட் என்ற படத்தினை இயக்கி சர்ச்சைக்குள்ளாகினார். வேறுபட்ட கலாச்சாரத்தை மையப்படுத்திய படமாக அமைந்த ஹாட் ஸ்பாட் படம் பலரின் எதிர்ப்புகளை மீறி திரையில் வெளியாகியது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் ரெடியாகவுள்ளதால், திடீரென இரவின் நிழல் படத்தில் நடித்த பிரிகிடாவை திருமணம் செய்தது போல் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் கார்த்திக் வெளியிட்டார்.
பிரிகிடாவுடன் திருமணம்
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இரண்டாம் கல்யாணம் என்று பலர் குழப்பத்தில் இருந்தனர். பின் ஹாட் ஸ்பாட் 2 படத்தின் பிரமோஷனுக்காக தான் இப்படி செய்துள்ளார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், பிரிகிடாவுடன் என் திருமண கோலத்தில் இருந்தேன் என்பதற்கு விக்னேஷ் கார்த்திக் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தின் கிளைமேக்ஸில், தயாரிப்பாளர் பெண்ணை கல்யாணம் பண்ண சம்மதித்து இருப்பார். அந்த பெண்ணை தான் இரண்டாம் பாகத்தில் நான் கல்யாணம் செய்திருப்பேன், அந்த பெண் தான் பிரிகிடா. முதல் பாகத்தில் தயாரிப்பாளர் பெண்ணை காட்டி இருப்பேன், அது உதவி இயக்குனரின் காதலி.
ஹாட் ஸ்பாட் 2Much
இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இல்லை என்பதால்வேறு யாருடைய போட்டோவும் போடமுடியாது என்பதால், அந்த பெண் போட்டோவை போட்டேன். 2ஆம் பாகத்தில் அவர் நடிக்கவேண்டிய அவசியம் இருப்பதால், அவர் நடிக்க முடியாது என்பதால், பிரிகிடாவை நடிக்க வைத்து, இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று பிரமோட் செய்தோம்.
2ஆம் பாகத்தை பார்க்க வருபவர்கள் பிரிகிடாவை தான் கல்யாணம் பண்ணி இருக்கார் என்று புரியும். இதனை பார்த்து என் மனைவி கொஞ்சம் பயந்துவிட்டார். அதிலும் கமெண்ட்ஸ் பார்த்து தான் வறுத்தப்பட்டதாக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.