முன்னாள் கணவர் குடும்பத்தை ஒதுக்கும் சமந்தா!! எங்கே என்று நடிகரிடம் கேட்ட மாஜி மாமனார்...

Samantha Naga Chaitanya Bigg Boss Vijay Deverakonda Gossip Today
By Edward Sep 05, 2023 08:45 AM GMT
Report

சமந்தா- நாக சைதன்யா இருவருக்குமிடையே விவாகரத்து ஆனது எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில் சமந்தா விவாகரத்தை தொடர்ந்து தைரியமாக கிளாமர் காட்சிகளில் நடிக்கிறார். தற்போது ரிலிஸாகியுள்ள குஷி படத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் உதட்டு முத்தக்காட்சி, நெருக்கமான ரொமான்ஸ் எல்லாம் செய்துள்ளார்.

படமும் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரமோஷனுக்காக விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் அமெரிக்கா வரை சென்று வருகிறார்கள்.

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க என்ன கூப்பிடல!! நடிகை ஸ்ரீதிவ்யா கூறிய உண்மை..

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க என்ன கூப்பிடல!! நடிகை ஸ்ரீதிவ்யா கூறிய உண்மை..

அப்படி தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு குஷி படத்தின் பிரமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா மட்டும் சென்றுள்ளார். ஹீரோ மட்டும் வந்திருப்பதை பார்த்த நாகர்ஜுனா, ஹீரோயின் சமந்தா எங்கே என்று கேட்க, அவர் அமெரிக்கவில் இருக்கிறார் என்று விஜய் தேவரகொண்டா கூறியிருக்கிறார்.

ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் தான் அமெரிக்கா சென்றார்கள், ஆனால் பிக்பாஸ் பிரமோஷனுக்கு மட்டும் சமந்தா ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்.

முன்னாள் கணவர் குடும்பத்தினரை பார்க்கக்கூடாது என்று சமந்தா இருந்து வருகிறாரா என்று நாக சைதன்யா ரசிகர்கள் கேள்வி கேட்க, ஆனால் மயோசிடிஸ் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.