புலம்பும் தமன்னா.. இந்த விஷயத்தால் தான் எனக்கு வாய்ப்பே கிடைக்கல

Tamannaah
By Parthiban.A May 19, 2022 01:30 PM GMT
Parthiban.A

Parthiban.A

Report

நடிகை தமன்னா ஒரு காலத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். ஆனால் வர வர தற்போது அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லை.

பல இளம் நடிகைகள் போட்டிக்கு வந்ததும் அதற்கு முக்கிய காரணம். ராஷ்மிகா, பிரியங்கா அருள்மோகன், க்ரித்தி ஷெட்டி போன்ற பல இளம் நடிகைகள் தற்போது முன்னணிக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தமன்னா மார்க்கெட் சரிந்து இருக்கிறது. அவ்வப்போது அவர் ஓவர் கிளாமர் காட்டி போட்டோஷூட் எடுத்தாலும் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

புலம்பும் தமன்னா.. இந்த விஷயத்தால் தான் எனக்கு வாய்ப்பே கிடைக்கல | Why Tamannaah Not Getting Movie Offers

தமன்னா தமிழ் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் வாய்ப்பு தேடி இருக்கிறார். ஆனால் அங்கும் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அவர் தற்போது பேசி இருக்கிறார்.

"நான் ஹிம்மத்வாலா போன்ற படங்களில் நடித்தபோது அதற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பிளாப் ஆன பிறகு வேறு எந்த பட வாய்ப்பும் எனக்கு ஹிந்தியில் வரவே இல்லை" என ஹன்சிகா கூறி இருக்கிறார். 

GalleryGallery