வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்ட மனகசப்பு!! விரக்தியில் விஜய் பக்கம் திரும்ப இது தான் காரணம்..
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் - அஜித். பொங்கலுக்கு இருவரின் படங்களாக வாரிசு - துணிவு படங்களுக்கு பின் இருவரும் அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி அஜித் விடாமுயற்சி படத்திலும் விஜய் லியோ படத்திலும் கமிட்டாகி இருக்கிறார்கள்.
ஆனால் அஜித் இன்னும் அப்படத்தின் சூட்டிங்கை தொடங்கவில்லை. ஆனால் விஜய் லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள தகவல் அதிகாரப்பூர்வமாகவே வெளியிட்டுள்ளார். இந்நிலையில் வெங்கட் பிரபு எப்படி விஜய்யை இயக்க வாய்ப்பு பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்து ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டதால் அஜித் வெங்கட் பிரபு மீது கோபத்தில் இருக்கிறார் என்றும் அதனால் தான் அஜித்தை உதறி விஜய்க்காக ஒரு கதையை எடுக்க வந்ததாகவும் அந்தணன் பகிர்ந்துள்ளார்.
அதாவது, விஜய் சமீபகாலமாக அரசியல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதால் அடுத்த படம் அரசியல் சார்ப்பாக இருக்க விரும்பி இருக்கிறார். அப்படி வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தினை விஜய் பார்த்திருக்கிறார்.
அவர் மட்டும் தான் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் சார்ந்த படங்களை இயக்கி வருகிறார் என்று எண்ணி சில மாதங்களுக்கு முன்பே வெங்கட் பிரபுவை வரவழைத்து ஒன்லைன் கதையை கேட்டிருக்கிறார் விஜய்.
அப்படி சில மாதங்களுக்கு முன் யுவன் சங்கர் ராஜாவையும் விஜய் சந்தித்த புகைப்படமும் வைரலானது. இந்த படம் மங்காத்தா 2 படமாக இருக்கலாமோ என்றும் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
