தனுஷ் போல் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றதற்கு ரூ. 84 கோடி வசூல் செய்த அதிகாரிகள்.. அடேங்கப்பா

vivek dhanush indian railway padikadhavan 84 crore
By Kathick Mar 01, 2022 11:30 AM GMT
Report

சுராஜ் இயக்கத்தில் வெளிவந்த படிக்காதவன் படத்தில் தனுஷ் மற்றும் விவேக் இருவரும் ஆந்திராவிற்கு டிக்கெட் எடுக்காமல் வித்தவுட்டில் செல்லும், காட்சிக்கு சிரிக்காத ஆளே இல்லை.

இந்நிலையில், படிக்காதவன் படத்தில் தனுஷ் செய்ததை போல், நிஜ வாழ்க்கையில் பலரும் செய்து அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். ஆம், இந்திய ரயில்வேவில், கடந்த ஏப்ரல் மாதம் முதல், கடந்த பிப்ரவரி மாதம் வரை, பயணசீட்டு இல்லாமல், வித்தவுட்டில் பயணித்தவர்கள் அனைவரிடமும் இருந்து சுமார் ரூ. 84 கோடி வரை வசூல் செய்துள்ளனர்.

அதிலும், சென்னையில் மட்டுமே சுமார் ரூ. 29 கோடிக்கும் மேல் பயணசீட்டு இல்லாமல் பயணித்தவரிடம் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.