பெண்கள் எப்போதும் அவசியமில்லாதவர்கள் தான்!! நடிகை பார்வதி காட்டம்...
நடிகை பார்வதி
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பார்வதி, சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நாம் எல்லாவற்ரையும் சரியாகச் செய்து, சிறந்த நடிப்பை கொடுத்து, நம் படங்கள் சூப்பர் ஹிட் ஆகினால், நம் திறமைக்குத்தான் இங்கு மதிப்பு என்று நான் உண்மையாகவே நினைத்தேன். என்னால் நடிப்பு மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி இரண்டையும் தர முடிகிறது.
அப்படி இருந்தும் நான் ஏன் திரையுலகில் ஓரங்கப்பட்டப்படுகிறேன் என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் எனக்கு புரிந்தது.

அவசியமில்லாதவர்கள்
இந்த சினிமா சிஸ்டத்தை பொறுத்தவரை பெண்கள் எப்போதும் அவசியமில்லாதது (Dispensable) என்பதுதான் அடிப்படை விதி. நீங்கள் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எவ்வளவும் பணம் சம்பாதித்துக் கொடுத்தாலும், நீங்கள் பேசும் உண்மைகள் அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தினால், உங்களை எளிதாகத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று பார்வதி கூறியிருக்கிறார்.