5 மாதம் நிற்க எழ முடியாது! நடிகை யாஷிகா வீட்டிற்கு செல்லாமல் எங்கு சென்றார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஒருசில படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்த யாஷிகா அமெரிக்காவில் வந்த தோழி ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பும் வழியில் மகாபலிபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து நேர்ந்தது.
அதில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆண் நண்பர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கை, கால், முதுகு இடங்களில் ஏற்பட்ட முறிவால் சில நாட்களுக்கு முன் யாஷிகாவிற்கு மூன்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். சமீபத்தில் தான் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் பிரபல நாளிதழுக்கு கொடுத்த ஆடியோ காலில் பேசியுள்ளார் யாஷிகா. அதில் இப்பொழுது கொஞ்சம் வலி குறைந்துவிட்டது. டிஸ்ஜார்ஜ் ஆகி தன் வீட்டிற்கு செல்லவில்லை. ஏனென்றால் என் வீட்டில் கடைசியாக இறந்த தோழி இருந்தால். அங்கு சென்றால் அவர் நினைவு வந்து கொண்டே இருக்கும் என்பதால் செல்லவில்லை.
தற்போது மருத்துவ செவிலியர் வீட்டில் அவருடனும் குடும்பத்துடனும் தங்கி எப்போதும் சாப்பிடும் உணவை சாப்பிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.