தோழி இறந்து ஒரு மாதம்? உன்னை சீக்கிரம் சந்திப்பேன் என கூறி வீடியோ வெளியிட்ட யாஷிகா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா. சில மாதங்களுக்கு முன் பார்ட்டி முடித்துவிட்டு காரில் சென்று விபத்து  ஏற்பட்டு தோழி இறக்க அவர் கை கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது உடல் சிறிது சரியாகிய நிலையில் சமூகவலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, என்னுடைய மிகப்பெரிய நலன் விரும்பி உடன் பிறவா சகோதரி என்றும் நான் உன்னை மிஸ் செய்தேன் உன்னை நினைக்காமல் ஒரு நாளும் சுலபமாக செல்வது இல்லை நான்.

பின்னோக்கி சென்று அனைத்தையும் சரி செய்ய ஆசைப்படுகிறேன். நீ எனக்கு கொடுத்த பல்வேறு அழகான நினைவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய தேவதை எங்களை மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

உன் வாழ்க்கையை நொறுக்கி விட்டேன். கூடிய சீக்கிரம் நாம் சந்திப்போம் என்று ஆதங்கத்துடன் கூறி வீடியோ ஒன்றினை வெளியிட்டுளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்