மல்லாக்கா படுத்து விட்டத்த பாக்குறது எவ்வளவு சுகம்! நடிகை யாஷிகாவை ஓட்டும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் மாடல் நடிகைகளின் வரவு அதிகரித்து வருவதை போன்று பிக்பாஸ் பிரபலங்களின் அறிமுகம் சினிமாவில் வரவேற்பு பெற்று வருகிறார்கள். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
படவாய்ப்பு:-
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் க்ளாமர் குயினாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார் யாஷிகா. இதையடுத்து ஒருசில படங்களில் க்ளாமர் காட்சிக்காகவே யாஷிகாவை கமிட் செய்து வந்தனர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அங்கும் குட்டை ஆடையணிந்து ரசிகர்களை மிரளவைத்தார். இதன்பின் ஜோம்பி, எஸ்ஜே சூர்யாவுடனும் படத்தில் நடித்து வந்தார்.
கார் விபத்து
படங்களில் நடித்து வந்தபோது யாஷிகா எப்போது பார்ட்டிக்கு செல்வதுமாக இருப்பார். அப்படி ஒருமுறை தன் அமெரிக்க தோழி இந்தியா வந்து பாண்டிச்சேரியில் பார்ட்டி கொடுத்து வீட்டு வீடு திரும்பி காரில் வந்துள்ளார். மகாபல்லிபுரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.
இதனால் சம்பவ இடத்திலேயெ யாஷிகாவின் தோழி பாவனி உயிரழந்தார். படுகாயத்துடன் 4 மாதங்கள் யாஷிகா படுத்தபடுக்கையாக இருந்து சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த காயம் சரியானப்பின் படங்களில் நடிக்கவும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.
இடையில் போட்டோஷூட் பக்கம் சென்று படுமோசமான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்டும் வந்தார். தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கருத்தினை கூறி வருகிறார்கள்.