விவாகரத்துக்கு பின் மகன்களுடன் அமெரிக்கா பறந்த தனுஷ்! ஐஸ்வர்யா என்ன செய்றாங்க தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் 2004ல் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து இரு ஆண் மகன்களை பெற்றெடுத்த தனுஷ் - ஐஸ்வர்யா 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரிவதாக முடிவெடுத்து தகவலை அறிவித்தனர்.
இந்த செய்தியால் ரஜினி உட்பட திரையுலகமே அதிர்ச்சியால் திகைத்தது. இதன்பின் தனுஷ் படங்களில் கவனம் செலுத்தியும் ஐஸ்வர்யா இயக்கம், உடற்பயிற்சி, சைக்கிளிங் என்று பிஸியாக இருந்து வந்தனர். நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் படங்கள் வெளியாகவுள்ளது.
தி கிரே மேன் படத்தின் பிரமோஷனுக்காக தனுஷ் அமெரிக்கா சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் தன் பங்கிற்கு உடற்பயிற்சி, சைக்கிளிங் என்று இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் தன்னுடைய இரு மகன்களையும் அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று தி கிரே மேன் பிரமோஷன் நடைபெற்றது. அப்போது கோர்ட் ஷெட்டுடன் வந்திருந்த தனுஷ் தன் இரு மகன்களுடன் ஹாலிவுட் மேடையில் போட்டோஷூட் எடுத்துக்கொண்டுள்ளார்.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் வரை தன் மகன்களை அறிமுகப்படுத்தியதை தனுஷ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.