நீடா அம்பானிக்கு டஃப் கொடுக்கும் தமிழிசை.. எந்த விஷயத்தில் தெரியுமா...
பெண்கள் அதிகமாக விரும்பக்கூடிய ஆடை என்றால் அது சேலை தான். புடவையை தேர்வு செய்வது சிரமமானது தான். அதற்கு காரணம் விரும்பும் நிறத்தில் விருப்பமான டிசைன் கிடைக்காது. இடத்திற்கு ஏற்ப பெண்கள் சேலையை அணிய விரும்புவார்கள்.
அந்தவகையில் நடிகைகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை கலர் கலரான சேலையை கட்டுவார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்பவும் பாரம்பரரியமும், கலாச்சாரமும், கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது.
நீடா அம்பானி
அப்படி கோடீஸ்வரர்களின் வீட்டிலும் இப்படியொரு மாறுதல் இருக்கும் என்பதை கேட்கவா வேண்டும். உலகில் அதிக விலையுயர்ந்த சேலையை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கட்டிய சேலை ஒவ்வொருன்றும் பல கோடி மதிப்புள்ளது.
ரூபி, புக்ராஜ், மரகதம் மற்றும் முத்து போன்ற அரிய ரத்தினக் கற்களால் அவரின் சேலை 35 பெண் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் தமிழக அரசியல் பிரபலமான தமிழிசை செளந்தராஜன் தன்னிடம் உள்ள சேலைகளின் கலெக்ஷன் தொடர்பான வியக்கவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழிசை செளந்தராஜன்
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒரு புடவையை எத்தனை நாட்களுக்கு பின் மறுபடியும் கட்டுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதனை சொல்லமுடியாது நிறைய வைத்திருக்கிறேன் என்றும் சேலை என்ன கலரில் இருக்கிறதோ அதற்கேற்ப ஆபரணங்களும் அந்த கலரில் அணிவேன்.
புடவையை எடுக்கும் போது அந்த ஆபரணங்களின் நிறமும் மனதில் வரும் என்பதால் புடவைக்கு ஏற்ப ஆபரணங்களை மாற்றுவேன். ஆனால் கட்சியையும் மாற்றவில்லை, கொள்கையும் மாற்றவில்லை. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 4 சேலை மாற்றுவேன், குறைந்த பட்சம் 2 சேலை உடுத்துவேன்.
பட்டு சேலை தான் அதிகமாக காட்டுவேன். அதிகட்சமாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சேலை இருப்பதால் 300 ரூபாய்க்கும் சேலை வாங்கி இருக்கிறேன். சேலை நன்றாக இருந்தால் எந்த நிறத்திலும் இருந்தாலும் வாங்குவேன். மஞ்சள், சிகப்பு சேலை பிடிக்கும், கருப்பு நிற சேலை பிட்க்காது என்றும் கூறியிருக்கிறார்.