விஜய்யை பார்த்து மிரண்டு போன ஹைதராபாத்! இவர பாத்து கத்துக்கணும்

Vijay Rashmika Mandanna
By Edward May 07, 2022 08:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பினை துவங்கியிருக்கிறார்.

விஜய். ரஷ்மிகா மந்தனா, சரத்குமர், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் மிச்சம் மிருக்க ஹைதராபாத்தில் கடந்த வாரம் துவங்கியது.

படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் பக்கத்திலேயே இரு ஓட்டலில் ரூம் போட்டு தங்கியிருக்கிறார் விஜய். தினமும் காலை 10 மணிக்கு ஷூட்டிங் சென்று தனக்கும் கொடுக்கும் ஷாட்டினை முடித்து விட்டு கேரவனுக்கு செல்லாமல் அங்கேயே சேர் போட்டு உட்கார்ந்து விடுகிறாராம்.

பின் அடுத்த ஷாட் வந்ததும் நடிக்க ஆரம்பித்து சூட்டிங் முடிந்த பின் சாப்பிடும் போது தான் கேரவனுக்குள் செல்கிறாராம் விஜய். மேலும் சரியான நேரத்தில் படப்பிடிப்பினை ஆரம்பித்து விடுகிறாராம்.

இதை பார்த்த ஹைதராபாத் ஊழியர்களும் சரி ரசிகர்களும் இப்படியொரு டெடிகேஷனுள்ள நடிகரை பார்த்து மிரண்டு போயுள்ளார்களாம். இவரை பார்த்து கத்துக்கோங்க என்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் மற்ற நடிகர்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.