சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை!! போல்ட்-ஆக பேசிய இளம் ஹீரோயின்..
இளம் ஹீரோயின்
சினிமாத்துறையில் இருக்கும் பாலியல் தொல்லை, அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பல நடிகைகள் ஓபனாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் சுற்றுலா என்ற பெயரோடு வரும் படத்தின் நாயகியாக நடித்து நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓபனாக பேசியிருக்கிறார்.
அதில், சினிமாவில் பெண்களுக்கு சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய நடத்தை, நம்மை நோக்கி வரும் கேள்விகளுக்கு நம்முடைய தைரியமான பதில்கள் தான் மிக முக்கியம். சிலர் தவறாக கேட்பது போன்ற நிலை வந்துவிட்டாலும் நாம் அதற்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியாக இருக்கிறது.
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை
அவர்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் வேண்டும் என்றால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் வேண்டாம் என்று முடிவு எடுத்த்விட்டால் அந்த முடிவில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும், அதுதான் முக்கியம். சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் தொந்தரவுகள் வரத்தான் செய்யும்.
ஆனால் நம்முடைய பதில்கள் அவர்கலுக்கு பயத்தை கொடுப்பதாக இருக்க வேண்டும். இது சினிமாவில் மட்டும் பெண்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் நடக்கவில்லை, எல்லாத்துறையிலும் நடக்கிறது. எல்லா இடத்திலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அந்த நடிகை பேசியிருக்கிறார்.