காசுக்காக கங்கை அமரனை அசிங்கப்படுத்திய கவுண்டமணி!! நன்றியை மறக்காமல் விஜய்காந்த செய்த செயல்
இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமையை சரியாக பயன்படுத்தி புகழின் உச்சிக்கு சென்றவர் கங்கை அமரன். இடையில் இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவில் இருந்து விலகியும் அண்ணன் மூஞ்சியில் 14 ஆண்டுகளுக்கும் மேல் முழுக்காமல் இருந்து வந்தார் கங்கை அமரன்.
பண விசயத்தில் கங்கை அமரன் தான் பட்ட கஷ்டத்தை சமீபத்திய பேட்டிகளில் கூறி வந்தார். கங்கை அமரன் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் 20 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
அப்படங்களில் குறிப்பாக காமெடி நடிகர் கவுண்டமணி கண்டிப்பாக நடித்தும் இருக்கிறார். பல படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்த கங்கை அமரனை காசுக்காக அவமானப்படுத்தியும் இருக்கிறார்.
அதாவது கோயில் காளை படத்தில் ராமசாமி கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருந்தார். அப்படத்தின் போது பணப்பிரச்சனையில் இயக்குனர் கங்கை அமரன் சிக்கியிருந்தார். தன்னுடைய சம்பளம் அவரின் கஷ்டத்தால் வராமல் போய்விடுமோ என்று நினைத்த கவுண்டமணி, தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
கவுண்டமணி சம்பள விசயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர் என்பதால் பணம் வராதோ வருமோ என்ற சந்தேகத்தில் நடித்து முடித்தப்பின் பணம் கேட்டுள்ளார். அப்படி சம்பளம் கொடுக்கவில்லை என்றால் நான் டப்பிங் வரமாட்டேன் என்று மேனேஜர் மூலம் கூறியிருக்கிறார்.
எப்படியாவது சீக்கிரம் படத்தை வெளியிட்டு சம்பளத்தை கொடுத்திருக்கிறார் கங்கை அமரன். பல வாய்ப்புகளை கொடுத்த அவரை காசுக்காக இப்படி அவமானப்படுத்தியதை நினைத்து கங்கை அமரன் வருத்தப்பட்டிருக்கிறார்.
அதிலிருந்து அவர் மூஞ்சியில் முழிக்காமல் இருந்திருக்கிறார் கங்கை அமரன். ஆனால், அப்படத்தில் நடித்த விஜயகாந்த், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம், கவலைப்படாதீர்ங்க என்றும் பணம் விசயம் சரியாகிவிடும் என்று ஆறுதலாக பேசியிருக்கிறார்.