கண்டுகொள்ளாத விஜய்! 18 வருடங்களாக யுவன் பார்வை தல மேலதான்..
தமிழ் சினிமாவில் தனக்கொரு தனிபாணியில் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு இசையமைத்து பெரிய ஹிட் கொடுத்து வருபவர் யுவன் சங்கர் ராஜா. முன்னணி நடிகர்கள் தற்போது ஹிட் கொடுத்தாலும் யுவன் இன்னும் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் படங்களில் இணையாமல் இருப்பது தான் ஆச்சரியம்.
ஏனென்றால் அவர் அறிமுகமாகி காலகட்டத்தில் இசைஞானி, இசைபுயல் இருவரும் டாப் இடத்தில் இருந்ததால் இரு ஜாம்பவான் நடிகர்களும் அவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கும் சூழலில் மாஸ் படங்களை கொடுத்தனர். இதையடுத்து அஜித், சூர்யா, சிம்பு படங்களுக்கு யுவன் இசையமைத்து தனக்கான ஒரு பெரிய இடத்தினை தமிழ் ரசிகர்களிடம் இருந்து வருகிறார்.
ஆனால் தளபதி விஜய்யுடன் கடந்த 18 ஆண்டுகளாக இணையாமல் இருக்கிறார். அதற்கு காரணம் 2003ல் வெளியான புதிய கீதை படத்தில் பாடலுக்கு மட்டும் இசையமைத்தார் யுவன். பின்னணி இசை அவரது அண்ணன் இசையமைத்திருந்தார். இதையடுத்து கமிட்டான படங்கள் எல்லாமே மாஸ் படங்களாக அமைந்திருந்தால் அதில் யுவனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் விஜய்.
கோபிநாத், வித்யாசாகர், மணிஷர்மா போன்றவர்களை வைத்தே இசையமைத்தும் போகபோக ஏஆர் ரகுமான் அனிரூத் செட்டாகிவிட்டதால் அவர்களுக்கே படங்களையும் கொடுத்து வருகிறார் விஜய். ஆனால் சமீபத்தில் மாஸ்டர் படத்தில் அந்த கண்ண பாத்தாக்க என்ற பாடலை பாடி கொடுத்திருப்பார். இனி வரும் காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணுவேன் என்று யுவன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.