சிராஜுக்கும் ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய்க்கும் என்ன தொடர்பு!! இதுதான் உண்மை..

Gossip Today Indian Cricket Team Mohammed Siraj Tamil Singers
By Edward Apr 14, 2026 10:43 AM GMT
Report

ஆஷா போஸ்லேவின் பேத்தி

இந்திய சினிமாவில் டாப் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே சில நாட்களுக்கு முன் தன்னுடைய 93வது வயதில் காலமானார். மும்பையிலுள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு மூவண்ணக் கொடி போர்த்தப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

சிராஜுக்கும் ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய்க்கும் என்ன தொடர்பு!! இதுதான் உண்மை.. | Zanai Bhosle Dating Mohammed Siraj The Truth

இந்திய பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் அவரின் இறுதி சடங்கிற்கு மரியாதை செலுத்தினர். அதன்பின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சிவாஜி பார்க் மின்மயானத்தில் ஆஷா போஸ்லேவின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் முதல்வர் ஃபட்னவிஸ் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஜனாப் போஸ்லே

அவரின் இறுதி அஞ்சலி இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜும் செலுத்தி, ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லேவுக்கு ஆறுதல் கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அப்படி இருவருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுந்து வந்தது.

சிராஜுக்கும் ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய்க்கும் என்ன தொடர்பு!! இதுதான் உண்மை.. | Zanai Bhosle Dating Mohammed Siraj The Truth

மறைந்த ஆஷா போஸ்லேவின் பேத்தியும் அவரது இளைய மகன் ஆனந்த் போஸ்லே மற்றும் அவரது மனைவி அனுஜா போஸ்லே ஆகியோரின் மகள் தான் ஜனாப் போஸ்லே, 2022ல் மும்பையில் பிறந்து பாட்டியை போலவே இசைத்துறையில் ஆர்வம் கொண்டு பாடகியாக வலம் வருகிறார்.

கதக் நடனக்கலையையும் பயின்றவர் ஜனாய். தி பிரைட் ஆஃப் பாரத் - சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக ராணி சாய் போன்சாலேவாக நடித்தார் ஜனாய்.

சிராஜுக்கும் ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய்க்கும் என்ன தொடர்பு!! இதுதான் உண்மை.. | Zanai Bhosle Dating Mohammed Siraj The Truth

சிராஜுக்கும் ஜனாய்க்கும்

அந்தவகையில் ஜனாய்க்கும் சிராஜுக்கும் காதல் அல்லம் சகோதர பாசம் மட்டும் தானாம். ஜனாய் போஸ்லேவும் முகமது சிராஜும் இதற்கு முன் பல்வேறு நிகழ்ச்சிகளில் சமூக ஊடக பதிவுகளில் ஒன்றாக இருந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே காதல் கலவாத நட்பு என்றும் அது சகோதர சகோதரி உறவை போன்றது என்றும் கூறப்படுகிறது. 2025 ஆகஸ் ரக்ஷா பந்தன் அன்று ஜனாய் பொதுவெளியில் சிராஜுக்கு ராக்கி கட்டி தன்னுடைய சகோதர பாசத்தை வெளிப்படுத்தினார். இணையத்தில் என் அன்புச்சகோதரன் என்று குறிப்பிட்டும் இருந்தார் ஜனாய்.

அதற்கு சிராஜும், உன்னைப்போல் ஒரு சகோதரி இல்லை, என் சகோதரி ஆயிரத்தில் ஒருத்தி என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery