திரிஷா அம்மாவை தெரியும்..அவங்க அப்பா யார்? எப்படி இறந்தார் தெரியுமா?
நடிகை திரிஷா
நடிகை திரிஷா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் பல சர்ச்சைகளில் சிக்கி வரு திரிஷா குறித்த பல தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் திரிஷா அம்மா உமா கிருஷ்ணனை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திரிஷாவின் அப்பா யார் என்ன என்பது பற்றி தெரியுமா? பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்பா யார்
தன்னுடைய மகள் பெரிய ஹீரோயினாக இருந்தாலும் அவரின் தந்தை கிருஷ்ணனோ கேமராவுக்கு தூரமாகவே இருந்திருக்கிறார். இதற்கிடையே உமாவுக்கும், கிருஷ்ணனுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால்தான் மனைவி, மகளுடன் அவர் தங்கவே இல்லை என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் அதில் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மகள் கோடிகோடியாக சம்பாதித்திருந்தாலும் கிருஷ்ணன் இறுதிவரை தன் சொந்த காலிலேயே நின்றவர். அவர் சென்னையில் பல நட்சத்திர ஹோட்டல்களில் மேனேஜராக பணியாற்றியவராம்.

தன்னுடைய பணியில் ரொம்பவே நேர்மையாக இருந்தவராகவும் ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவ்வளவு பக்குவமாக பேசுவாராம். அவருடன் பழகிய, நேரில் பார்த்தவர்கள் இதை சொல்வார்களாம்.
எப்படி இறந்தார்
முக்கியமாக தான் ஒரு பெரிய நடிகையின் அப்பா என்பதை காட்டிக்கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாராம். இறுதிவரை அவரை சினிமா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்கூட பார்க்க முடியவில்லை.

சென்னையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் திடீரென ஹைதராபாத்துக்கு சென்று ஹோட்டலில் பணிபுரிய ஆரம்பித்துள்ளார். கடந்த 2012ல் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட உயிரிழந்துவிட்டார். தந்தை இறந்தது திரிஷாவை ரொம்பவே அப்செட்டாக்கிவிட்டதாம். இப்போதும் தன் தந்தை நினைவில்தான் திரிஷா இருக்கிறாராம்.