கிருபாவை ஏற்றிவிடும் திவாகரன்.. இந்துவால் நடக்கும் மாற்றம் - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கிருபா தேர்தலில் நிற்காமல் வாபஸ் வாங்க முடிவு எடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, திவாகரன் எதுக்காக இப்படி முடிவெடுத்தீங்க என்று கேட்க தேர்தல்ல எப்ப வேணாலும் இருக்கலாம் ஆனா வீட்ல கவனம் செலுத்த முடியல.. அந்த இந்து எல்லாத்தையும் மாத்திடுவா என்று சொல்ல கிருபா அதெல்லாம் பாத்துக்கலாம் நீங்க தேர்தல் நில்லுங்க என்று சொல்கிறான். மேலும் கட்சி தலைமைக்கு போன் செய்து அண்ணா வாபஸ் வாங்கல தேர்தல நிக்கிறாரு என்று சொல்கிறான்.
அடுத்ததாக கர்ணா ஆட்டோவில் இந்துவை மடியில் உட்கார வைத்து பயணம் செய்ததை நினைத்துப் பார்த்து பாட்டு பாடுகிறான். இந்த சமயத்தில் பாஸ்கர் இந்துவுக்கு போன் செய்து நாளைக்கு தீனதயாளன் ஐயாவுக்கு டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கேன் கூட்டிட்டு வந்துருங்க என்று சொல்கிறான். மேலும் வரும்போது சித்ராவையும் அழைத்து வர சொல்கிறான். அதன் பிறகு தீனதயாளனுக்கு சாப்பாடு கொடுக்க அவன் மற்றவர்களையும் உட்கார்ந்து சாப்பிட சொல்ல சுகுணா, ஜெயந்தி அவங்க வந்துவிடும் அதுக்கப்புறம் நாங்க சாப்பிடுறோம் நீங்க சாப்பிடுங்க மாமா என்று சொல்கின்றனர்.

அவங்க வர லேட் ஆகும் அதுவரைக்கும் சாப்பிடாம இருப்பீங்களா? நீங்க சாப்பிட்டாதான் நான் சாப்பிடுவேன் என்று சொல்ல வேறு வழியில்லாமல் எல்லோரும் சாப்பிடுகின்றனர். இந்த சமயத்தில் கிருபா மற்றும் திவாகரன் வீட்டுக்கு வர ஜெயந்தி சுகுணா சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து முறைக்கின்றனர். இதனால் இது வரும் பயத்தில் நடுங்க தீனதயாளன் நீங்க வர வரைக்கும் அவங்க சாப்பிடாம காத்திருக்கணுமா? நான்தான் சாப்பிட சொன்னேன்.
அவங்களை ஏதாவது சொன்னா நான் வெளியே போய்டுவேன் என்று சொல்கிறார். திவாகரன் கிருபாவிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த இந்து தான் என ஏற்றி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.