வீடு தேடி வந்த அப்பத்தா.. நினைத்ததை நடத்திய மீனாட்சி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Zee Tamil Tamil TV Serials
By Jai Sep 16, 2026 07:30 AM GMT
Report

வாகை சூடவா

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பத்தான் மீனாட்சி சிவாவை அழைத்து செல்வதற்காக சுமதி வீட்டுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்றைய நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

வீடு தேடி வந்த அப்பத்தா.. நினைத்ததை நடத்திய மீனாட்சி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Zeetamil Vaagai Sooda Vaa Sep 16 Episode Details

அதாவது தியானத்திற்காக வந்த மீனாட்சி ஜீவா ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து தியானத்தில் அமருகின்றனர். மறுபக்கம் அப்பத்தா வீட்டுக்கு வர வராதவர் வந்திருப்பதால் சுமதி தேன்மொழி ஆகியோர் அப்பத்தாவை ஓடியோடி கவனிக்கின்றனர். மீனாட்சிக்கு போன் செய்ய போன் ஸ்விட்ச் ஆப் ஆக இருப்பதை பார்த்து அப்பத்தா கடுப்பாகி அவ வேண்டும் என்று தான் போன சுவிட்ச் ஆப் பண்ணி இருக்கா என கோபப்படுகிறார்.

வீடு தேடி வந்த அப்பத்தா.. நினைத்ததை நடத்திய மீனாட்சி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Zeetamil Vaagai Sooda Vaa Sep 16 Episode Details

மேலும் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்ய வாசுதேவன் போன் செய்ய என்னால எல்லாம் அவமானப்பட்டு இங்கே இருக்க முடியாது என சொல்லி போனை வைக்கிறார். உடனே பாண்டியிடம் இருந்து போன் கால் வருகிறது. என்ன வெளியே வருகிறேன் என்று சொல்றாங்க எப்படி ஆச்சு அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு என்று சொல்ல அப்பத்தா வேறு வழியில்லாமல் நிற்கிறார்.

வீடு தேடி வந்த அப்பத்தா.. நினைத்ததை நடத்திய மீனாட்சி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Zeetamil Vaagai Sooda Vaa Sep 16 Episode Details

தியானம் முடிந்து மீனாட்சி போனை ஆன் செய்ய தேன்மொழி போன் செய்து அப்பத்தா நம்மள கூட்டிட்டு போகிறதுக்காக வீட்டுக்கு வந்து இருக்காங்க.. நீ சீக்கிரம் வா என்று சொல்ல மீனாட்சி நினைத்தது நடந்த சந்தோஷத்தை அடைகிறாள். ஆனால் அதே நேரத்தில் அப்பத்தாவின் மீது முழு நம்பிக்கையும் இல்லாமல் வீட்டுக்கு கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.