50வது பர்த்டே!! கண்ணழகி மீனாவின் சொத்து மதிப்பு விவரம்...

Meena Birthday Tamil Actress Net worth
By Jai Sep 16, 2026 06:45 AM GMT
Report

மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயினாக மாறி டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து நைனிகா என்ற மகளை பெற்று வளர்த்து வந்தார்.

நன்றாக சென்று கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் கணவர் வித்யாசாகரின் மரணம் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. கணவர் இறந்தப்பின் பல மாதங்களுக்குப்பின் மீண்டு வந்த மீனா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மீனா, தோழிகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.

50வது பர்த்டே

இந்நிலையில் மீனா இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

50வது பர்த்டே!! கண்ணழகி மீனாவின் சொத்து மதிப்பு விவரம்... | Meena 50Th Birthday Actress 60 Crore Net Worth

அதன்படி மீனாவுக்கு மொத்தம் ரூ. 60 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அவருக்கு 4 வீடுகள் இருக்கிறதாம். நடிப்பை தாண்டி மற்ற தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை ஈட்டி வருகிறாராம்.