IVF மூலம் குழந்தை பிறக்க 1000 ஊசிக்கு மேல் போட்டுக்கொண்டேன்!! நடிகை தேஜஸ்வினி...
தேஜஸ்வினி கோலாபுரே
பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்குப்பின் 2015ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போராட்டத்திற்குப்பின் பிறந்தது. தன்னுடைய பெண் குழந்தை எப்படி பிறந்தது குறித்து ரியாலிட்டி ஷோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் நான் 5 முறை IVF சிகிச்சை செய்துகொண்டேன். அதைப்பற்றி நான் மிகவும் வெளிப்படையாக பேசுவேன், அதை செய்யும்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். IVF சிகிச்சை என்பது மிகவும் கடினமான ஒரு செயல்முறை. முதல் இரண்டு முறை கடினமாக இருக்கும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது முறை சரியாகிவிடும். மருத்துவமனைக்கு சென்று அந்த ஊசிகலை போட்டுக் கொள்வதற்கே நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இது மிகவும் வேதனையான ஒரு செயல்முறை.
நான் என் வாழ்க்கையில் பிற்பகுதியில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் அறிவுரை என்னவென்றால், தயவு செய்து 35 வயதுக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நான் தாமதமாக குழந்தை பெற்றுக்க்கொண்டது நிச்சயமாக உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை பாதித்தது. நன் அப்போது இருந்ததுக்கும் இப்போது இருப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. மனதளவில் நான் மிகவும் வலிமையானவள்.

உடல்ரீதியாக 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் எடுத்துக் கொண்டேன். இதனால் உடல் மாறிவிட்டது. உங்கள் கர்ப்பம் பாசிட்டிவாக இருந்தால் அவர்கள் நிறுத்துக்கிறார்கள். நான் IVF சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள 5 முறை முயற்சித்தேன். இதில் இரு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. 5வது முறையாகத்தான் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது என்று கூறியிருக்கிறார் தேஜஸ்வினி.