இனிமேல் இப்படி ஒரு கேஸ் போடுவ.. 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி
நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் என்கிற பெயரில் அவ்வப்போது சில வித்தியாசமான வழக்குகள் நீதிமன்றம் செல்வது உண்டு. அப்படிப்பட்ட கேஸ்களில் வழக்கு தொடுத்தவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்த செய்திகளையும் பார்த்திருப்போம்.
தற்போது கொரோனா தடுப்பூசி போட்டதற்கசான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என கேட்டு வழக்கு தொடர்ந்த நபருக்கு ஒரு லட்சம் ருபாய் அபராதம் விதித்து இருக்கிறது கேரள நீதிமன்றம்.
RTI ஆக்டிவிஸ்ட் பீட்டர் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் மோடியின் போட்டோவை உடனே நீக்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் வழக்கு போட்டவரை வறுத்தெடுத்து இருக்கின்றனர்.
இது பப்ளிசிட்டிக்காக போடப்பட்ட வழக்கு என்றும் அதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று தெரிவித்து உள்ளனர் நீதிபதிகள்.
"பிரதமர் என்றால் காங்கிரஸ் பிரதமர், பிஜேபி பிரதமர் என்று இல்லை.. அவர் நமது நாட்டின் பிரதமர், அரசின் கொள்கைகள் மீது உங்களுக்கு முரண்பாடு இருக்கலாம், அரசியல் வேறுபாடுகள் கூட இருக்கலாம், ஆனால் பிரதமர் போட்டோ இருக்கும் சான்றிதழை வைத்திருப்பதை அவமானமாக கருத கூடாது" என தெரிவித்து உள்ளனர்.
வழக்கு தொடுத்த நபருக்கு ஒரு லட்சம் ருபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அதை Kerala State Legal Services Authority (KeLSA) க்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். கட்ட தவறினால் அவரது சொத்துகளை விற்று அந்த பணத்தை பெறும்படி உத்தரவிட்டு உள்ளனர்.