ஒரு நாளைக்கு 13 பாட்டில் பீர்..கல்லீரல் இழந்தும் குடித்து மரணத்தை தேடிக்கொண்ட நடிகர்..
சினிமாத்துறையில் வாரிசுகளுக்கு மத்தியில் தன்னுடைய திறமையால் முன்னேறி மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பெற்றவர்களில் ஒருவர் தான் நடிகர் கலாபவன் மணி. அவரின் உண்மையான பெயர் குன்னிசேரி வீட்டில் ராமன் மணி. கேரள திருச்சூர் அருகேவுள்ள சாலக்குடியில் பிறந்தவர் பிறப்பிலேயே கலை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தவர். சிறு வயதில் பாடல் பாடுவது என இருந்தவர், மிமிக்ரி பக்கம் திரும்பினார்.

அப்படி தன் திறமையை நிரூபித்து கலாபவன் குழு என்பது மேடை நிகழ்ச்சிகளை நடத்துக் குழு ஒன்றை ஆரம்பித்தார். 1990ல் பிரபலமாக இருந்த இக்குழுவில் இருந்து தான் இன்றைய மலையாள முன்னணி நடிகர்கள் வந்திருக்கிறார்கள்.
இக்குழுவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. பாடல், மிமிக்ரி, நடனம், ஆடல் என்று இருந்தவர் சொந்த இசையில் சொந்த வரிகளை கொண்டு பாடல் எழுதி மேடையில் பாடுவார். அவருக்கு முதல் படம் மலையாளம் அல்ல, தமிழ் சினிமா தான். கேப்டன் பிரபாகரன் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்தப்பின் ஆக்ஷரம் என்ற மலையாள படத்தில் நடித்தார்.

சினிமா வாழ்க்கை
ஆட்டோ ஓட்டி தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் முதல் படத்திலும் ஆட்டோ ஓட்டுநராக நடித்தார். அதன்பின் மிகப்பெரிய உச்சத்தை அடைந்த கலாபவன் மணி, மலையாள திரைப்படத்துறை வரலாற்றில் சிறப்பு நடிகர் பிரிவில் தேசிய விருதை வென்ற கேரள நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
தமிழில் பல படங்களில் நடித்தவர், மொத்தமாக 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். உதவும் குணம் கொண்ட கலாபவனை தேடி தினமும் 20 பேராவது அவரிடம் உதவி கேட்க வருவார்களாம். அந்தவளவுக்கு தன்னால் முடிந்த உதவிகளை கலாபவன் மணி செய்திருக்கிறார்.

தன்னுடைய உதவியளரின் கல்லீரல் சிகிச்சைக்காக ரூ. 10 லட்சம் கொடுத்து உதவிய மணி, அத்தனையும் ஒரே நாளில் இழந்தார் என்பதுதான் சோகமான விஷயம். 2016 மார்ச் 3 ஆம் தேதி கலாபவன் மணி சாலகுடியிலுள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
13 பாட்டில் பீர்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதேநாளில் கலாபவன் மணி மரணமடைந்தார். மரணத்திற்கு பல சந்தேகங்கள் எழுந்த நிலையில், விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்றெல்லாம் பேச்சி எழுந்தது. ஆனால் அதீத குடிப்பழக்கமே அவரின் உயிருக்கு ஆபத்தாக முடிந்தது என்று விசாரணையில் தெரியவந்தது.

7 ஆண்டுகள் கழித்து அவரின் வழக்கை விசாரித்த அதிகாரி, தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் என்றும் கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை விடவில்லை என்றும் பகீர் தகவலை தெரிவித்தனர்.
கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை என்றும் மரணத்தை கலாபவன் மணியே தேடிக்கொண்டார் என்றும் ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.