பிரகாஷ் ராஜுடன் 16 வருடத்திற்கு பின் விவாகரத்து!! முன்னாள் கணவர் பற்றி கூறிய லலிதா குமாரி..
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் லலிதா குமாரியை 1994ல் திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் இருவரும் பிரிவதாக கூறி விவாகரத்து பெற்றனர்.
அதன்பின் பிரகாஷ் ராஜ், போனி வர்மா என்ற நடன இயக்குனரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்று வாழ்ந்து வருகிறார். சினிமாத்துறையை பொறுத்தவரையில் பிரபலங்களை விட்டு பிரிந்து செல்வபவர்கள் அதற்கு பின் அவர்களை பற்றி மோசமாக பேசுவார்கள்.
ஆனால் சமீபத்தில் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி லலிதா குமாரி அவரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
விவாகரத்து பெற்று பிரிந்தோமே தவிர என் குழந்தைகளுக்கு அவர் தான் தந்தை என்றும் அந்த விசயத்தில் என்னைவிட அவர் தான் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்றுவரை குழந்தைகளுக்கு தேவையானவற்றை மிகசரியாக செய்தும் வருகிறார். 16 வருடங்கள் நாங்கள் மகிழ்ச்சியாக ஒற்றுமையாக வாழ்ந்தது உண்மை தான். அவரை பற்றி தவறாக பேச மாட்டேன் என்று லலிதா குமாரி தெரிவித்துள்ளார்.