தனுஷ் - மிருணாள் தாகூர் திருமணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல பாலிவுட் இயக்குநர்...
தனுஷ் - மிருணாள்
நடிகர் தனுஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவியுடன் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்ததை நாம் அறிவோம். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
சமீபத்தில், நடிகை மிருணாள் தாகூருடன் தனுஷுக்கு திருமணம் நடக்கப்போவதாக தகவல்கள் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டன. வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இவர்களுடைய திருமணம் என கூறப்பட்டது. இதனை நிராகரித்து இதுவரை தனுஷ் தரப்பில் இருந்தோ அல்லது மிருணாள் தாகூர் தரப்பில் இருந்தோ பேசவில்லை.

பாலிவுட் இயக்குநர்
இந்நிலையில், இதுதொடர்பாக தனுஷுக்கு நெருக்கமாக இருக்கும் பிரபல பாலிவுட் இயக்குநர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆங்கில செய்தி ஊடகத்தில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை, நாங்கள் தினமும் செல்போனில் பேசிகொண்டுதான் இருக்கிறோம், யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்.

விவாகரத்து நடந்தபோது மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்தே இருப்போம் என்று தனுஷும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவும் முடிவெடுத்தார்கள். தனுஷை பொறுத்துவரைக்கும் 2வது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை.
அதற்கு காரணம் தன்னுடைய மகன்களுக்கு சித்தியாக ஒருவரை முன்னிறுத்த அவர் விரும்பவில்லை, தனுஷ் - மிருணாள் தாகூர் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும், ஆனால் அது திருமணத்தில் முடியும் என்று சொல்ல முடியாது என்று இயக்குநர் ஓபனாக பகிர்ந்துள்ளார்.