என் மார்பிங் படங்களை லீக் செய்ததே ஒரு பெண்!! அனுபமா பரமேஸ்வரன் ஆதங்கம்..
அனுபமா பரமேஸ்வரன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அனுபமா குறித்த மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் போலிஸார் விசாரணை நடத்தி யார் அதை உருவாக்கியவர் என்று தேடி வந்தனர். இந்நிலையில் அனிபமா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

என் மார்பிங்
அதில், சில நாட்களுக்கு முன், ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை பற்றியும் என் குடும்பத்தினரை பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை பற்றியும் மிகவும் பொறுத்தமற்ற, தவறான பதிவுகளை வெளியிட்டு வருதாக எனக்கு தெரியவந்தது. அந்த பதிவுகளில் என்னுடைய மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தன.
இதுபோன்ற துன்புறுத்தல்களை ஆன்லைனில் பார்ப்பது மிகவும் வருத்தாகவுள்ளது. மேலும் விசாரணையுல் பரப்பும் ஒரே நோக்கத்துடன் அதேநபர் பல போலிக்கணக்குகளை உருவாக்கியிருப்பதும், இதுகுறித்து அறிந்ததும், நான் உடனடியாக கேரளாவிலுள்ள சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகாரளித்தேன். அவர்கள் உடனடியாக, திறமையாக நடவடிக்கை எடுத்து, அவர்களின் உதவியால் இந்த செயலுக்கு பின் யார் இருக்கிறார் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது பெண் என்ற தகவல் எனக்கு அச்சரியத்தை அளித்தது. அவருடைய இளம் வயதை கருத்தில் கொண்டு அவருடைய எதிர்காலத்திற்கும் மன அமைதிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று நான் முடிவெடுத்துள்ளேன்.

இருந்தாலும் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்துவதற்காக இந்த சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஸ்மார்ட்போன் வைத்திருப்பது, சமூக ஊடகத்தளங்களை அணுகுவதன் மூலம் யாரையும் துன்புறுத்தவோ, அவதூறு செய்யவோ, அல்லது மற்றவர்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பவோ யாருக்கும் உரிமை கிடையாது.
ஆன்லைனில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச்செல்கிறது. அதற்கு நாம் பொறுபேற்க வேண்டும். நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த பெண் தன் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார்.
ஒரு நடிகராகவும், பொது நபராகவும் இருப்பது அடிப்படை உரிமைகளை பறித்துவிடாது, ஆன்லைனில் அவதூறு செய்வது தண்டனைக்குரிய குற்றம், அதற்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும் என்று அனுபமா பரமேஸ்வரன் இந்த பதிவினை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் ஒரு பெண்ணே ஒரு பெண்ணுக்கு எதிரியா? என்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.