அடுத்தடுத்து மூன்று மரணங்கள்.. வாழ்க்கையில் போராட்டி உச்சத்துக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்து வந்த சவால்கள்..
சினிமா வாய்ப்புகள் பெரும்பாலும் சிபாரிசு அல்லது வாரிசுகளாக இருந்தால் மட்டுமே சீக்கிரமாக வாய்ப்பு பெற்று உச்சத்தை அடையமுடியும். அப்படி எந்த வாய்ப்பும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்து ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்களின் இடத்தினை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்கா முட்டை
ஆரம்பத்தில் நீயெல்லாம் ஒரு நடிகையாக முடியாது என்று பலர் ஒதுக்கினார்கள் என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி தன் வாழ்க்கையை புரட்டி போட்ட படம் அட்டக்கத்தி. பா ரஞ்சித் அறிமுகப்படுத்தி, அதன்பின் சிறு ரோல்களில் விஜய் சேதுபதி சிபாரிசு கிடைத்து வளர்ந்தார். அதன்பின் காக்கா முட்டை என்ற படம் அவரின் கேரியரை அப்படியே மாற்றியமைத்து உச்சத்தை தொட காரணமாக அமைந்தது.
மூன்று மரணங்கள்
இப்படி ஐஸ்வர்யார் ராஜேஷின் இந்த உழைப்பு முக்கிய காரணமே எட்டு வயதில் இருந்தே ஏற்பட்ட பல இழப்புகள் தான். 8 வயதின் போது தந்தையின் மரணம். தந்தை மரணத்திற்கு பின் 3 அணணன்கள் உடபட 4பேரையும் வீடு வீடாக புடவை விற்று காப்பாற்றி வந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா.
குடும்ப சூழ்நிலைக்காக சினிமாவில் அறிமுகமாகிய ஐஸ்வர்யா ராஜேஷின் ஒரு அண்ணன் காதல் தோல்வியால தற்கொலை செய்து கொண்டுள்ளார். மற்றொரு அண்ணன் மாத சமபளத்திற்கு வேலைக்கு சென்ற போது விபத்தில் உயிரிழப்பு என்று பல இழப்புகளை சந்தித்து வந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.