41 வயதை எட்டிய ஜாக்குலின் பெர்னாண்டஸ்!! சொத்து மதிப்பு, சம்பள விவரம்...
ஜாக்குலின் பெர்னாண்டஸ்
பாலிவுட் சினிமாவில் 2009ல் வெளியான Aladin என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

பிரிட்டிஸ், ஸ்ரீலங்கா, கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ள ஜாக்குலினி சமீபத்தில் வெளியான Welcome to the Jungle படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
சில ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி பண மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சிக்கினார். இதனையடுத்து Jugni என்ற பாடலில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சொத்து மதிப்பு
இந்நிலையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியோடு தன்னுடைய 41வது வயதை எட்டியுள்ளார் ஜாக்குலின். ஒரு படத்திற்கு சுமார் ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக பெறும் ஜாக்குலின் ஐட்டம் பாடலுக்கு மட்டுமே ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம்.
அந்தவகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொத்து மதிப்பு சுமார் ரூ. 115 கோடி முதல் ரூ. 116 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.