700 படங்கள்..2முறை திருமணம்!! மதுப்பழக்கத்தில் சிக்கிய பிரபல நடிகை ஊர்வசி..
தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் தான் அந்த நடிகை. டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த அந்த நடிகை குணச்சித்திர ரோலில் தற்போது நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
நடிகை ஊர்வசி
700க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்து அந்த நடிகை ஓவராக மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து தற்போது மீண்டு வந்திருக்கிறார். அது வேறுயாருமில்லை நடிகை ஊர்வசி தான். மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தாலும் அதிகமான படங்களில் தமிழில் தான் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகையாக இருக்கும் ஊர்வசி, தனது வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது பல பிரச்சனைகளை சந்தித்தார்.
தனிப்பட்ட பிரச்சனையால் மதுவுக்கு அடிமையாகி சினிமா வாழ்க்கையை அழித்துக்கொண்டார். திருமண வாழ்க்கையும அதனால் பாதிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு நடிகர் மனோஜ் கே ஜெயனை திருமணம் செய்த ஊர்வசி ஒரு மகளை பெற்றெடுத்தார். அதன்பின் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு கோர்ட் வரை சென்று விவாகரத்து பெற்றனர்.
அதனை தொடர்ந்து 2016ல் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத் என்பவரை 44 வயதில் திருமணம் செய்து பிரஜாபதி என்ற மகனை பெற்ற்டுத்தனர். தற்போது நடிப்பில் கவனத்தை செலுத்தி வரும் ஊர்வசி முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
