இந்த வருட மிகபெரிய படுதோல்வி இந்த படம் தான், 80 கோடி வரை நஷ்டமா
Pawan Kalyan
Box office
By Tony
பவன் கல்யாண் நடிப்பில் கடந்த வருடம் OG படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் ரூ 300 கோடி வசூலை ஈட்டியது.
இந்நிலையில் இந்த வருடம் இவர் நடிப்பில் உஸ்தாத் பகத்சிங் படம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் இயக்குனர் பவன் கல்யாணுடன் இணைந்து கப்பர் சிங் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர்.

அதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்த படம் வந்தது. ஆனால், இந்த படம் உலகம் முழுவதும் ரூ 100 கோடி கூட வசூல் செய்யவில்லை. இதனால் 80 கோடி வரை இந்த படம் நஷ்டத்தை சந்திக்கும் என தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
அது மட்டுமின்றி இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் மிகப்பெரிய தோல்வி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
