AI இல்லை, அச்சு அசலாக நடிகர் ஃபஹத் பாசில் போல இருக்கும் நபர்.. நீங்களே பாருங்க!! - இதோ வீடியோ
ஃபஹத் பாசில்
இந்திய அளவில் பிரபல நடிகராக மாறியுள்ளனர் ஃபஹத் பாசில். வில்லன், ஹீரோ, காமெடி என எந்த ரோல் கொடுத்தாலும் நடித்து அசத்திவிடுவார்.
இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், வேலைக்காரன், மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஆவேசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி சில நாட்களிலேயே ரூ 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வீடியோ
இந்நிலையில் ஃபஹத் ஃபாசில் போல் இருக்கும் நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஃபஹத் ஃபாசில் போல இருக்கும் இவரின் பெயர் அக்கிபக்கர். கேரளமாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறாராம்.
இதோ வீடியோ...
பார்க்க அச்சு அசல் அப்படியே ஃபஹத் ஃபாசில் போல இருக்கும் இவரின் பெயர் அக்கிபக்கர். கேரளமாநிலம் கொடுங்கல்லூரைச் சேர்ந்த இவர் மஸ்கட்டில் பணிபுரிகிறார். pic.twitter.com/Y9zG31zQu8
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) April 20, 2024