40 வயதிலும் மேக்கப் இல்லாமல் கெத்து காட்டும் நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா துணை நடிகையாக களமிறங்கி இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் லிஸ்டிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மௌனம் பேசியதே படம் முதலில் வெளியாக அதுவே முதல் படமாக அமைந்தது.
முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.
லேட்டஸ்ட் வீடியோ
இப்போது விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் நடிக்கிறார்.
இந்த நிலையில் சன்டே ஸ்பெஷலாக சுத்தமாக மேக்கப் இல்லாத ஒரு வீடியோவை த்ரிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் கெத்து காட்டுகிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.