6 மணிக்குமேல் அந்த நடிகர் வெளியில் வருவதில்லை!! யாரை சொல்கிறார் நடிகை ஆர்த்தி..
நடிகை ஆர்த்தி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழ்பெற்றப்பின் நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஆர்த்தி கணேஷ்கர். திமுகவின் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வரும் ஆர்த்தியின் தந்தை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

சமீபத்தில் அவரது தந்தை இறந்துவிட்டதால் தந்தையின் மறைவு குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2024 முதல் பாஜகவில் தன்னை இணைத்து கொண்ட ஆர்த்தி, திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத் குமாரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
6 மணிக்குமேல்
அப்போது பேசிய ஆர்த்தி, ஒரு நடிகர் களத்தில் இறங்கியுள்ளார், அவர் தற்போதுதான் சைக்கிள் ஓட்டவே கற்றுக் கொண்டுள்ளார். அரசியலில் ராக்கெட், பிளைட் ஓட்ட காலம் பிடிக்கும், ஆனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு தம்முடைய முகத்தை காட்டிவிட்டால் ஓட்டு கிடைக்கும் என முகத்தை மட்டும் காட்டி வருகிறார்.

அதாவது சினிமாவில் காலை 6 மணிக்கு ஷூட்டிங் எடுத்து மாலை 6 மணிக்கு முடிந்துவிடும். அதுபோல் இவர் ஷூட்டிங் என நினைத்துக்கொண்டு மாலை 6 மணிக்கு மேல் வருவதில்லை. ஒரு படத்தில் கவுண்டமணிக்கு 6 மணிக்குமேல் கண் தெரியாது. அது மாலைக்கண் நோயாக இருக்கும். அதுபோல் இவருக்கும் ஏதோ ஒன்று என நான் நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.