சுயமரியாதைன்னு பேசிய ரவி!! துரோகம் ஆதாரங்களுடன் வரும்னு அதிரடியாக பதிலடி கொடுத்த ஆர்த்தி..
நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் இடையே கடந்த ஆண்டு பிரிவு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ரவி மோகன் தன்னுடைய தோழியுடன் வெளியுலகத்தில் ஜோடியாக உலாவியும் ஆர்த்தி தன் மகன்களுடன் வெளிநாட்டு அவுட்டிங் சென்றும் வருகிறார்.

ரவி மோகன்
இந்நிலையில் ரவி மோகன், பராசக்தி ஆடியோ லான்சின் போது, பராசக்தி படத்தில் நான் நடித்ததற்கு முக்கிய காரணம், சுயமரியாதையை காப்பாற்ற போராடும் படம், நானும் என் வாழ்க்கையில் சுயமரியாதையை காப்பாற்ற போராடினேன் என்று பேசியிருந்தார்.
அவர் பேசியது தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை வைத்து பேசியிருக்கிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் ஆர்த்தி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட்டான போட்டோஷூட்டுடன் ஒரு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

ஆர்த்தி பதிலடி
அதில், சுயமரியாதை மற்றும் கொடுமை பற்றிய குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் ஆதாரமில்லாமல் சுமத்தப்படுகிறது. இப்படி சொல்பவர்கள் எப்போதும் தான் சொல்வதுபடி வாழ்வதில்லை. ஆனால், துரோகம் ஆதாரங்களுடன் வரும், மேடை என்பது நடிப்பதற்காக, ஆனால் நிஜ வாழ்க்கைக்கு நேர்மை தேவை.
ஒருவர் மற்றவர்மீது பழிச்சுமத்த மேடையை பயன்படுத்தும்போது அது வெளிச்சத்தில் இருப்பவர்களைவிட பழி சுமத்துபவரை பற்றியே அதிகம் சொல்கிறது. ஒருநாள் அவளுக்கும் அதே மேடையை பயன்படுத்தும் வாய்ப்பு வரும். அந்த நாள் நடிப்பாக இருக்காது, அது உண்மையின் வெளிப்பாடாக இருக்கும்.
அந்தநாள் அருகில்தான் இருக்கிறது. அவள் நம்பிய ஒரு நாயகனை ஒருகாலத்தில் காதலித்திருக்கலாம், ஆனால் பின் அவளறிந்த வில்லனிடமிருந்து தப்பி உயிர் பிழைக்கிறாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அவள் தன் சுயமரியாதையை நிலைநிறுத்துகிறாள் என்று ஆர்த்தி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.