அப்பாஸ் பட வாய்ப்பை தட்டிப்பறித்த விஜய்.. இதற்கு இவர் தான் காரணம்
90ஸ் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். இவர் 1996 -ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பல வெற்றிகளை ருசி பார்த்த இவர். சிறிது காலம் திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். இவர் கடைசியாக பச்சைக்கள்ளம் என்னும் மலையாள படத்தில் நடித்திருந்தார்.
வாழ்க்கை
அப்பாஸ் ஏரும் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்தினரோடு நியூஸிலாந்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் 'எனக்கு முட்டியில் பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துளேன்' என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தவர்.
தளபதி விஜய்
விஜய் நடிப்பில் 1997-ல் வெளியான காதலுக்கு மரியாதை மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் விஜயின் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது.
இப்படத்தில் ஹீரோவாக முதலில் நடிக்கவிருந்தது அப்பாஸ் தான் என்று பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதை குறித்து அப்பாஸிடம் பேட்டி ஒன்றில் கேட்டுள்ளனர்.
பதில் அளித்த அவர்" இயக்குனர் பாசில், காதலுக்கு மரியாதை படத்தில் நடிக்க என்னிடம் அணுகினார். ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய மேனேஜர் வேறு படத்திற்கு கால்ஷீட் வாங்கியுள்ளார். இதனால் தான் நடிக்க முடியமால் போனது" என்று சோகத்துடன் கூறினார்.