டான்ஸ் ஆடுனது ஒரு குத்தமா.. அபிஷேக் ராஜாவை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்
Bigg Boss
Iykki Berry
Abishek Raaja
By Parthiban.A
பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றதால் இருந்த மொத்தத்தையும் இழந்துவிட்டார் அபிஷேக் ராஜா. அவரது பெயர் கெட்டது தான் மிச்சம். சமூக வலைதளங்களில் அவரை மிக மோசமாக ட்ரோல் செய்வதில் தான் குறியாக இருக்கின்றனர்.
ஒருமுறைக்கு இருமுறை அவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கிறார். ஆனால் இன்னும் திரைப்படங்கள் ரிவியூ செய்யும் வேலையையும் அவர் மீண்டும் தொடங்கவில்லை. அதை தொடங்கினால் இன்னும் எவ்வளவு ட்ரோல் வருமோ.
தற்போது ஐக்கி பெரி அபிஷேக் ராஜா உடன் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக்கை திட்டி வருகின்றனர். "அவனுடன் சேராதீங்க" என ஐக்கி பெரிக்கு அட்வைஸ் கூறி இருக்கின்றனர்.