ராஷ்மிகா பொண்ணு கூடவும் நடிப்பேன்.. உங்களுக்கு என்ன பிரச்சனை.. 59 வயதில் சல்மான் கான் காட்டம்..
சல்மான் கான்
பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். இவர் சமீபத்தில் வெளிவந்த பேபி ஜான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
தற்போது இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கைகோர்த்துள்ளார் சல்மான் கான்.
சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நேஷ்னல் க்ரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு
இதில், 59 வயதாகும் சல்மான் கானுக்கு 28 வயதாகும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார், இருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தது.
மகள் வயது உள்ள ராஷ்மிகாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரே என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் இதுகுறித்து வெளிப்படையாக சல்மான் கான் பேசியுள்ளார்.
இதில், "ஹீரோயினுக்கும் எனக்கும் இடையே 31 வயது வித்தியாசம் உள்ளது என கமெண்ட் செய்கிறார்கள். வயது வித்தியாசத்தால் ஹீரோயினுக்கு பிரச்சனை இல்லை.
அவரின் அப்பாவுக்கும் பிரச்சனை இல்லை. அப்படி இருக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை?. ராஷ்மிகாவுக்கு திருமணமாகி மகள் பிறந்தால், அவருடனும் சேர்ந்து நடிப்பேன்" என கூறியுள்ளார்.